கோடையில் வெயிலுக்கு விடுமுறை கொடுத்த குமரி மாவட்டம்!

பொதுவாக மே மாதம் வெயில் சுள்ளென எரிக்கும்.

ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த மே மாதம் கிட்டத்தட்ட இதுவரை 15 நாட்களுக்கு மேல் மாவட்டத்தின் அனைத்து பகுதி களிலும் நல்ல மழை பெய்தது. சில பகுதிகளில் 20 நாட்கள் கூட மழை பெய்திருக்கிறது.

kanyakumari 2018 summer click (2)இப்போது கடந்த 3 நாட்களாக காலை , மதியம், மாலை என சாரல் மழை, பெருமழை பெய்து மக்களை மகிழ்விக்கிறது. பொதுவாக மே மாதம் வீடுகளில் உள்ள கிணறுகளில் தண்ணீர் வற்றி, தண்ணீருக்கு சிரமப்படுவார்கள். இப்போது அந்த பிரச்சனையும் இல்லை. எல்லா இடங்களில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது.

Kanyakumari Summer Rains
Pic Credits: திருவட்டாறு சிந்துகுமார்

அதுபோல் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைக்கட்டுகளிலும் நீர் மட்டம் உயர்ந்துள்ளதோடு, ஆறுகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. சொல்லப்போனால் இந்த ஆண்டு மே மாதம் கோடையில் வெயிலுக்கு கன்னியாகுமரி மாவட்டம் விடுமுறை அளித்தது எனலாம்.

இப்போது நீங்கள் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்தால் குளு குளு என ஊட்டி குளிரை அனுபவிக்கலாம். வருணபகவானுக்கு நன்றி.


“நற நற நற நற” மழை பெய்யாத ஊர்க்காரர்கள் பல்லை நற நறன்னு கடிக்குற சத்தம் கேட்கிறது. எனவே இத்துடன் மழை தம்பட்டத்தை நிறுத்திக்கொள்கிறேன்.


Article Credits:  திருவட்டாறு சிந்துகுமார்


 

Comments