கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை காப்போம் !

கன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலை!

ஒரு மலையை எளிதாக உடைத்து விடலாம் ஆனால் எத்தனை கோடி செலவு செய்தாலும் ஒரு மலையை_நம்மால் உருவாக்கமுடியாது

kanyakumari western ghats 4கன்னியாகுமரி மாவட்டம் #குறிஞ்சி #முல்லை #மருதம் #நெய்தல்என நான்கு வகை நில அமைப்புகளை கொண்ட தனிச்சிறப்பு வாய்ந்த மாவட்டம்

  • குறிப்பாக 48.9% விவசாய நிலங்களை கொண்ட மாவட்டம்
  • இருண்டு பருவ மழையும் பொழியும் ஒரே மாவட்டம் நம் குமரி மாவட்டம் 
  • வள்ளியாறு தாமிரபரணி ஆறு பழையாறு என மூன்று ஆறுகள் பாயும் மாவட்டம் 
  • எங்கு பார்த்தாலும் பச்சை கம்பளம் பொருத்தியதுபோல் புல் வெளிகள்கொண்ட மாவட்டம் 
  •  32.5% அடர்ந்த வனப்பகுதிகளை கொண்ட மாவட்டம் 
  • அணைகட்டுக்களை கொண்ட மாவட்டம் 

இத்தனை இயற்க்கை வளங்களுக்கும் ஒரே காரணம் நம் மேற்கு தொடர்ச்சி மலைதான் இத்தனை இயற்கை வளங்களையும் நாம் அனுபவித்து மகிழ்கின்றோம்.

ஆனால் நம் சந்திகளுக்கு இதை பார்க்கும் வாய்ப்புகள் மிக குறைவு என எண்ணுகின்றேன் காரணம் நம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் #மலை_அழிப்பு #அரசின் அனுமதியோடு சில ஊழல் பெருச்சாளிகள் நம் கன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலையை உடைத்து வெளி #மாநிலங்களுக்கு அனுப்புகின்றனர்

ஒரு மலையை எளிதாக உடைத்து விடலாம் ஆனால் எத்தனை கோடி செலவு செய்தாலும் #ஒரு_மலையை_நம்மால்_உருவாக்க முடியாது ஒரு #ஆற்றை நம்மால் #உருவாக்க முடியாது,

நமக்கு கிடைத்த இந்த #இயற்க்கை அதிசயத்தை நம் சந்ததிகளும் அனுபவித்து பயன் பெற #மலைகள் உடைக்கப்படுவதை தடுப்போம் !

நம் கன்னியாகுமரி மாவட்ட #மேற்கு_தொடர்ச்சி_மலை_காப்போம் !

Article & Image Credits: Dison Duke
Comments